close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' : சூப்பர் அப்டேட்டை அறிவித்த சன் பிக்சர்ஸ்

Thursday, November 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ஏற்கனவே பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்றைய அறிவிப்பில் அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் சிவராஜ்குமார் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதோடு, சிவராஜ்குமார் புகைப்படம் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ‘ஜெயிலர்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு உள்பட ஒருசிலர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் சிவராஜ்குமாரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் தமன்னா நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.