கேரளாவில் பள்ளத்தில் சரிந்து விழும் பங்களா: அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Friday,August 17 2018]

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமே ஸ்தபித்து போயுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தை விட அம்மாநில மக்களை அச்சுறுத்துவது நிலச்சரிவுதான். ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் போக்குவரத்து பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைத்தள பயனாளி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பங்களா போன்ற ஒரு வீடு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முற்றிலும் சரிந்து பள்ளத்தில் விழுகிறது. இதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். இதேபோன்று அருகில் உள்ள மற்ற வீடுகளும் பேராபத்தில் உள்ளது.

இந்த வீடியோவை இணையதளத்தில் பார்க்கும் நமக்கே அதிர்ச்சி ஏற்படுகிற நிலையில் நேரில் பார்த்தவர்களுக்கு இருக்கும் மனநிலையை நினைத்து பார்க்கவே முடியவில்லை. இந்த பேரிடரில் இருந்து கேரள மக்கள் விரைவில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

More News

இயக்குனருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய யுவன்

கடந்த வாரம் வெளியான யுவன்ஷங்கர் ராஜாவின் 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதுவதால்

மலையாள மீடியாக்களின் மனிதாபிமானம்

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது

நயன்தாராவின் முதல் சாதனை

பொதுவாக ரஜினிகாந்த், அஜித் ,விஜய், சிவகார்த்திகேயன் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் திரையரங்குகள் திரையிடப்படுவது வழக்கம்.

கவிதை மனம் கொண்டவனுக்கு கண்ணியம் இருக்கும்: வாஜ்பாய்க்கு வைரமுத்து புகழாரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாஜ்பாய் மறைவுக்கு ரஜினிகாந்த், சச்சின் இரங்கல்

முன்னாள் பாரத பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன்னர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.