close
Choose your channels

நயன்தாராவின் முதல் சாதனை

Friday, August 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ரஜினிகாந்த், அஜித் ,விஜய், சிவகார்த்திகேயன் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் திரையரங்குகள் திரையிடப்படுவது வழக்கம். சமீபத்தில் வெளியான மிர்ச்சி சிவாவின் 'தமிழ்ப்படம் 2' திரைப்படமும் அந்த வகையில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்கள் இன்றி, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்று அதிகாலை காட்சி திரையிடப்படுவது தென்னிந்திய திரையுலகில் இன்றுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது. ஆம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இன்று ஒருசில திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் புரமோஷன்கள், டீசர்-டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவைகளினால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இன்னும் சில மணி நேரத்தில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.