இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தவறுதலாக மாற்றித் செலுத்திக் கொண்டால் ஆபத்தா?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவேக்சின், கோவிஷுல்டு என இரு கொரோனா தடுப்பூசிகள் இடம்பெற்ற நிலையில் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்தத் தடுப்பூசிகளில் எதாவது ஒன்றை 28 நாட்கள் இடைவெளியுடன் 2 டோஸ் எடுத்துக் கொள்ளுமாறு மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி ஒன்றாகவும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வேறொன்றாகவும் தவறுதலாகச் செலுத்தப்பட்டு விட்டது.

இதுகுறித்து, ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை போடக் கூடாது என மத்திய கொரோனா தடுப்பு பணி அலோசகர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை மாற்றிப் போட்டாலும் கூட அதனால் எந்த ஆபத்தும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். அதோடு இருவேறு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தி சோதனை செய்து பார்க்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் கோவிஷுல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வு அடுத்த வாரம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

பாலியல் தொல்லை தந்துவிட்டு, "மை டியர் மகளே" என பம்பிய ஆசிரியர்....!

சென்னையில் மகரிஷி பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தள்ளி போகிறதா 'தளபதி 65' ரிலீஸ் தேதி!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் தொடங்கியது என்பது தெரிந்ததே. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்காக

பூம்பூம் மாட்டுக்காரரை கண்டுபிடித்த ஜிவி பிரகாஷ்: விரைவில் நேரில் சந்திப்பு!

சில நாட்களுக்கு முன்னர் இணையதளங்களில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரின் இனிமையான இசை அனைவரையும் கவர்ந்தது என்பதும் இது குறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

தமிழ் ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு கொரோனா: திருமணம் தள்ளிவைப்பு!

தமிழ் திரைப்பட ஹீரோயின் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுடைய திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக

பேசினாலே கொரோனா பரவுமா? அச்சுறுத்தும் புதிய தகவல்!

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே அவர்களிடம் இருந்து  மற்றவர்களுக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு