close
Choose your channels

தள்ளி போகிறதா 'தளபதி 65' ரிலீஸ் தேதி!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் தொடங்கியது என்பது தெரிந்ததே. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செட் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சிகள் எடுத்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என விஜய் கூறியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.