close
Choose your channels

ஜூலியை காதலிக்கின்றாரா ஸ்ரீ? ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

Friday, June 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டு வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் அவருடைய பெயரில் உள்ள ஃபேஸ்புக்கில் 'காய்ச்சல் என்று பொய் சொல்லி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிக்பாஸ் ஜூலியை தான் விரும்புவதாகவும் அதே பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் நாளில் 'என்னை விட்டு போயிடனும்ன்னு நினைக்காதே என்று ஜூலி கூறியதும், ஜூலிக்கு காயம் ஏற்பட்டபோது ஸ்ரீ மருந்து போட்டதையும் வைத்து பார்க்கும்போது மேற்படி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைத்து இருவரின் காதலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் விஷமி ஒருவர் ஸ்ரீ பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து மேற்படி பொய்யான ஸ்டேட்டஸ்களை போட்டு வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த சில மணி நேரம் மட்டுமே பரவிய ஸ்ரீ-ஜூலி காதல் வதந்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.