உலகப்புகழ் பெற்ற பாடலுக்கு ஆட்டம் போடும் ஸ்ருதிஹாசன் - அக்சராஹாசன்: வைரல் வீடியோ


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனின் வாரிசுகளான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகிய இருவரும் உலகப்புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
யூடியூபில் உலகம் முழுதும் புகழ்பெற்ற ’Magalenha’ பாடலுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகிய இருவரும் சூப்பராக டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன. இந்த பாடல் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல் என்றும் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் இந்த இனிய ஆண்டில் அனைவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் டான்ஸ் ஆடும் இந்த டான்ஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.