மீண்டும் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் : இரு பிரபலங்களுடன் வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் நடிகையான ஸ்ருதிஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று 'சலார்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துவரும் இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்

‘கே.ஜி.எப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பு நடைபெற்று வருகிறது

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் பதிவு செய்துள்ளார் அதில் இயக்குனர் பிரசாத் நீல் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் ஆகிய இரு பிரபலங்களும் உள்ளனர்.

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் புவன் ஒளிப்பதிவில் உஜ்வால் குல்கர்னி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

மாலத்தீவில் பிரபாஸ் நிச்சயதார்த்தம்? பிரபல நடிகை தான் மணப்பெண்ணா?

பிரபல நடிகை உடன் பிரபாஸ் நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து பிரபாஸ் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர் 

ஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.. வைரல் புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

'துணிவு' பட நடிகரின் மனைவிக்கு சீமந்தம்.. வைரல் புகைப்படங்கள்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய சீமந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

தொடங்கியது 'விடுதலை' பிசினஸ்.. மிகப்பெரிய தொகைக்கு சாட்டிலைட்,  டிஜிட்டல் உரிமை..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் நாயகனாக 'குக் வித் கோமாளி' அஸ்வின்.. இயக்குனர் யார் தெரியுமா?

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் சமீபத்தில் வெளியான 'செம்பி' என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.