close
Choose your channels

மீண்டும் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் : இரு பிரபலங்களுடன் வைரல் புகைப்படம்..!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் நடிகையான ஸ்ருதிஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று 'சலார்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துவரும் இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்

‘கே.ஜி.எப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பு நடைபெற்று வருகிறது

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் பதிவு செய்துள்ளார் அதில் இயக்குனர் பிரசாத் நீல் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் ஆகிய இரு பிரபலங்களும் உள்ளனர்.

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் புவன் ஒளிப்பதிவில் உஜ்வால் குல்கர்னி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment