நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் சிபிராஜின் 'வட்டம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,July 25 2022]

சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 24 மணி நேரத்தில் நடக்கும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, இந்த படத்தை ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை கமலக்கண்ணன் என்பவர் இயக்கி உள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த படத்தின் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில் ஜூலை 29ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

More News

லண்டனில் இருந்து இப்போதைக்கு வருவதாக இல்லையா? பிரியங்கா மோகனின் வைரல் புகைப்படங்கள்!

நடிகை பிரியங்கா மோகன் கடந்த சில மாதங்களாக வெளி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் துபாய் உள்பட அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்களை அவர் தனது

'குக் வித் கோமாளி' முடிந்தது, அடுத்தது பிக்பாஸ் எப்போது தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி' நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விஜய் டிவி நிர்வாகம் செய்து வருவதாக

இந்த வயதில் நடிக்க வந்தது ஏன்? நிருபரின் கேள்விக்கு அண்ணாச்சியின் 'நச்' பதில்!

 சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அவர்கள் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அம்மாவின் இறப்பை உணர்ச்சியுடன் பதிவு செய்த தமிழ் நடிகர்!

இயக்குனர் ஏ எல் விஜய் மற்றும் நடிகர் உதயா அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் உதயா தனது அம்மாவின் மறைவு குறித்து உணர்ச்சிகரமாக தனது

'மாமன்னன்' உதயநிதியின் கடைசி படமா? இன்று இரவு அதிரடி அறிவிப்பு

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி தற்போது எம்எல்ஏவாக இருப்பதால் அவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்பட்டு வந்தது.