close
Choose your channels

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் சிபிராஜின் 'வட்டம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, July 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 24 மணி நேரத்தில் நடக்கும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, இந்த படத்தை ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை கமலக்கண்ணன் என்பவர் இயக்கி உள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத பலர் மற்றவர்களுடைய வாழ்க்கையின் உள்ளே 24 நேரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும், அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த படத்தின் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில் ஜூலை 29ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.