சினிமாவுக்கு வருகிறார் சித்த மருத்துவர் வீரபாபு: டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய மருத்துவமனையில் ஏராளமான கொரோனா வைரஸ் நோயாளிகள் குணம் ஆகி உள்ளனர் என்பதும் அவரிடம் வந்த கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சித்த மருத்துவர் வீரபாபு சினிமாவிலும் நடிக்க உள்ளதாகவும் அது மட்டுமன்றி அவர் நடிக்கும் படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. சித்த மருத்துவர் வீரபாபு நடித்து இயக்கவிருக்கும் படத்தின் டைட்டில் ’முடக்கருத்தான்’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை வயல் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்க அருள்செல்வன் ஒளிப்பதிவில் உருவாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பின் இசையமைப்பாளர் சிற்பி இந்த படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார். இந்த படத்தின் பாடல்களை பழனிபாரதி எழுத உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவத்தில் சாதனை செய்த வீரபாபு சினிமாவிலும் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கணவரை கொலை செய்த கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட மனைவி: அதன்பின் நடந்த விபரீதம்!

கணவரை கொலை செய்த கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் செய்த விபரீத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சிவசங்கர் பாபாவிற்கு ஜால்ரா போட்ட சேவகிகள்....! 5 பேர் தலைமறைவு....!

கடந்த சில நாட்களுக்கு முன், சிவசங்கர் பாபா சிறுமிகளுடன் தவறாக நடக்கவில்லை

தமிழர் பண்பாடுகளை காண்பித்த என்னுயிர் அப்பா....! ராஜாவுக்கு சீமான் வாழ்த்துமடல்....!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று தன்னுடைய 78-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

'வலிமை' டீசர் தேதி: படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கிவிட்டன.

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம விருந்து!

சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இப்போதே அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் ஏற்பாடுகளில் உள்ளனர்