close
Choose your channels

சினிமாவுக்கு வருகிறார் சித்த மருத்துவர் வீரபாபு: டைட்டில் அறிவிப்பு

Saturday, July 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய மருத்துவமனையில் ஏராளமான கொரோனா வைரஸ் நோயாளிகள் குணம் ஆகி உள்ளனர் என்பதும் அவரிடம் வந்த கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சித்த மருத்துவர் வீரபாபு சினிமாவிலும் நடிக்க உள்ளதாகவும் அது மட்டுமன்றி அவர் நடிக்கும் படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. சித்த மருத்துவர் வீரபாபு நடித்து இயக்கவிருக்கும் படத்தின் டைட்டில் ’முடக்கருத்தான்’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை வயல் மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்க அருள்செல்வன் ஒளிப்பதிவில் உருவாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பின் இசையமைப்பாளர் சிற்பி இந்த படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார். இந்த படத்தின் பாடல்களை பழனிபாரதி எழுத உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவத்தில் சாதனை செய்த வீரபாபு சினிமாவிலும் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.