சிம்புவின் 'AAA' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்

  • IndiaGlitz, [Sunday,September 25 2016]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை அதாவது செப்டம்பர் 26 முதல் தொடங்கவுள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் நாயகி தமன்னா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் நிலையில் முதல் கேரக்டரான மதுரை மைக்கேல் குறித்த காட்சிகள் நாயகி ஸ்ரேயாவுடன் கடந்த மாதம் திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் 2வது கேரக்டர் அஸ்வின் தாதா என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கேரக்டரின் படப்பிடிப்பு நாளை முதல் நடைபெறவுள்ளது.

More News

தனுஷின் 'கொடி' மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி-நேரம்

தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படம் 'கொடி' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

'இமைக்கா நொடிகள்' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

அதர்வா முரளி நடித்து தயாரிக்கும் 'செம போதை ஆகாதே' படத்தை அடுத்து அவர் நடிக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும்,

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு நாளை முக்கிய நாள்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்