'வாலு' ரிலீஸ் குறித்து டி.ஆர். முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 10 2015]

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென 'வாலு' படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதற்கு உதயநிதிதான் காரணம் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது மறுப்பை தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் வாலு' படத்தின் ரிலீஸுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் சற்று முன்னர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இது சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. எனவே பல தடைகளை தாண்டி சிம்புவின் ரசிகர்கள் வரும் வெள்ளியன்று 'வாலு' திரைப்படத்தை பார்ப்பது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், சலீம் கெளஸ் உள்பட பலர் நடித்துள்ள 'வாலு' படத்தை அறிமுக இயக்குனர் விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசையில் உருவான இந்த படத்திற்கு ஷக்தி ஒளிப்பதிவும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

More News

'10 எண்றதுக்குள்ள' படத்தின் அதிகாரபூர்வ டீஸர் ரிலீஸ் தேதி

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி...

'வாலு' வெளியீட்டை தடுக்கவில்லை. உதயநிதி விளக்கம்

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் 'வாலு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்...

பிரபல தொழிலதிபரை திருமணம் செய்கிறார் நடிகை அசின்

எம்.குமரன் s/o மகாலட்சுமி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அசின் அதன் பின்னர் விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன், அஜீத்துடன் வரலாறு, ஆழ்வார், சூர்யாவுடன் கஜினி, வேல், கமல்ஹாசனுடன் தசவாதாரம் போன்ற பல படங்களில் நடித்தார்.....

கோவா, சீனாவில் 'விஜய் 59' படப்பிடிப்பு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தய&#

அரண்மனை நாயகி ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர்களில் கமல், விஜய், மகேஷ்பாபு உள்பட பலர் குழந்தை நட்சத்திரத்திரமாக அறிமுகமாகி புகழ் பெற்றதை போல நடிகைகளில் ஸ்ரீதேவி, ஷாலினி மற்றும் பலர் குழந்தை நட்சத்திரம் முதல் ஹீரோயின் வரை புகழ் பெற்று வந்துள்ளனர்......