close
Choose your channels

'வாலு' ரிலீஸ் குறித்து டி.ஆர். முக்கிய அறிவிப்பு

Monday, August 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் ரிலீஸாகும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென 'வாலு' படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதற்கு உதயநிதிதான் காரணம் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது மறுப்பை தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் வாலு' படத்தின் ரிலீஸுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் சற்று முன்னர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இது சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. எனவே பல தடைகளை தாண்டி சிம்புவின் ரசிகர்கள் வரும் வெள்ளியன்று 'வாலு' திரைப்படத்தை பார்ப்பது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், சலீம் கெளஸ் உள்பட பலர் நடித்துள்ள 'வாலு' படத்தை அறிமுக இயக்குனர் விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசையில் உருவான இந்த படத்திற்கு ஷக்தி ஒளிப்பதிவும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.