close
Choose your channels

சிம்பு-அருள்நிதி மோதல்: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

Tuesday, July 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் சிம்பு மற்றும் அருள்நிதி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ரிலீசாகி வருகிறது என்பது என்பதும் அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இந்த வாரம் சிம்பு, அருள்நிதி நடித்த படங்கள் உள்பட மொத்தம் நான்கு படங்கள் ரிலீசாக உள்ளது. சிம்பு ஹன்சிகா நடிப்பில் ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மஹா’. இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஹன்சிகாவின் 50வது படம் என்பது கூடுதல் சிறப்பு

அதேபோல் அருள்நிதியின் ’டி பிளாக்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’தேஜாவு’ வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது என்பதும் டிரைலரை பார்த்த அனைவரும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் கூறு வருகின்றனர்.

இந்தவாரம் வெளியாகும் இன்னொரு திரைப்படம் ‘சிவி 2’. கடந்த 2017ஆம் ஆண்டு ‘சிவி’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய கே.ஆர். செந்தில் நாதன் இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த வாரம் வெளியாகும் இன்னொரு திரைப்படம் ’நதி’. சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன், முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை தாமரை செல்வன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment