சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

சமீபத்தில் சீமானை கைது செய்யப் போவதாக ஒரு  வதந்தி பரவியதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் செய்த வாக்குவாதம் காரணமாக மறுநாள் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்க இன்று நடிகர் சிம்பு சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று வந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சென்னையில் போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதில் உடன்பாடில்லை. ஐ.பி.எல். போராட்டத்தின் போது கடமையை செய்ய வந்த காவலரை தாக்கியது தவறு; அதற்கு முன் என்ன நடந்தது என தெரியாது. மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்; மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என்று கூறினார்.

More News

சூர்யா-செல்வராகவன் 'NGK' படத்தின் புதிய அப்டேட்

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட படங்களில் ஒன்று அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் டீகே'வின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்

வைபவ் நாயகனாக நடிக்கும் காட்டேரி படத்தில் நடிக்க வரலட்சுமி, ஆத்மிகா, மற்றும் சோனம் பாஜ்வா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில்

'காலா' ரிலீஸ் தேதி: தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது