சிம்புவின் கார் மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Wednesday,March 23 2022]

நடிகர் சிம்புவின் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை இளங்கோ நகர் என்ற பகுதியில் கடந்த 18ஆம் தேதி சிம்புவின் கார் சென்று கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் மீது கார் ஏறியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிம்புவுக்கு சொந்தமானது என்றும் காரை அவரது ஓட்டுநர் செல்வம் என்பவர் ஓட்டி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் இந்த கார் விபத்து நடந்தபோது காரின் உள்ளே சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் இருந்ததாகவும் ஆனால் இந்த விபத்துக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிம்புவின் டிரைவர் செல்வத்திடம் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு நிரந்தரமாகிவிட்டதா? ஒரே ஒரு வார்த்தையால் ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 18 ஆண்டுகளாக ஒற்றுமையான தம்பதிகளாக இருந்த நிலையில் திடீரென இருவரும் பிரியஇருப்பதாக அறிவித்தது

'வலிமை' ஓடிடி ரிலீசுக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை குறித்து மாஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசை குறித்த மாஸ் தகவலை வெளியிட்டதை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

வனிதாவை அடுத்து மீண்டும் ஒரு வாக்-அவுட்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்படுவார் என்பது அனைவரும் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மட்டும் முன் எப்போதும் இல்லாத

திடீரென மும்பை விசிட் செய்யும் நயன்தாரா? எதற்கு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏப்ரல் முதல் வாரம் மும்பை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .