புதிதாக திருமணமான நட்சத்திர ஜோடிக்கு வீடியோ காலில் வாழ்த்து கூறிய சிம்பு: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,November 22 2021]

சின்னத்திரை நட்சத்திர ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வீடியோகால் மூலம் நடிகர் சிம்பு வாழ்த்து கூறிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை நட்சத்திரங்களான மதன் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் இணைந்து நடித்தனர். அப்போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி அதன்பின்னர் இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே.

இந்த திருமணத்திற்கு சின்னத்திரை உலக மற்றும் பெரிய திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ரேஷ்மா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோகால் மூலம் சிம்பு வாழ்த்து கூறிய வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். சிம்பு தங்களுக்கு வாழ்த்து கூறியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றும், அதுவும் குறிப்பாக மதனுக்கு மிகப் பெரிய சந்தோசம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

செல்ல மகனுடன் மழலை மொழியில் கொஞ்சும் ஹர்திக் பாண்டியா… வைரல் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவுடன் கொஞ்சி விளையாடும்

மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' வெற்றிக் கூட்டணி!

தமிழ் திரையுலகில் மெகா ஹிட்டான படங்களில் ஒன்றான 'பருத்திவீரன்' கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிசம்பரில் வெளியாகும் இரண்டு அதர்வா படங்கள்: என்னென்ன படங்கள்?

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வாவின் இரண்டு திரைப்படங்கள் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரையுடன் காரசாரமாக மோதும் பிரியங்கா: அடுத்த எலிமினேஷனா?

கடந்த சில வாரங்களாகவே தாமரையுடன் மோதியவர்கள் எல்லிமினேஷன் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா தாமரையுடன் காரசாரமாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய்சேதுபதியுடன் இணைந்த கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.