close
Choose your channels

'STR48'ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி இதுவா?  சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை விருந்து..!

Wednesday, January 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் அதிகம் இருப்பதால் கடந்த சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் விறுவிறுப்பாக நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் கனவு திரைப்படமான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்திற்கான நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி இன்னொரு பக்கம் இந்த படத்தை கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அவருடைய 48வது படத்தின் டைட்டில் போஸ்டர் என அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment