'மாநாடு' ரிலீஸ் தேதி அறிவிப்பு: தீபாவளிக்கு மும்முனை போட்டியா?

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள ’அண்ணாத்த’ படம் ரிலீசாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தல அஜித்தின் ’வலிமை’ படமும் தீபாவளி அன்று ரிலீசாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சிம்புவின் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளதால் வரும் தீபாவளியன்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

நிறைவான மகிழ்வில் #மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இத்தனை நாட்கள் பேரன்போடு இப்படத்தை தாங்கிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள். உங்கள் ஆதரவோடு வருகிறோம். வெல்வோம்.#maanaadu

More News

'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தகவலை அறிவித்த விஷால்!

விஷால் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தூ.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும்

என்ன மாப்பிள்ளைங்களா, கொஞ்ச நேரம் ஜாலியா விளையாடலாமா? 'பகைவனுக்கு அருள்வாய்' டீசர்

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடித்த படங்களில் ஒன்று 'பகைவனுக்கு அருள்வாய்'என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

'பொன்னியின் செல்வன்' புரொஜக்டை ஆரம்பித்த ரஜினி மகள்: வைரல் புகைப்படங்கள்

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது

என்னோட உயிர் இப்படி தான் போகணும்: வடிவேலு பேட்டி

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அனைத்து பிரச்சனைகளை முடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன