'வெந்து தணிந்தது காடு' ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்: எப்போது ரிலீஸ்?

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

மேலும் நேற்று முன்தினம் முதல் நாளில் இந்த படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்களில் என்பதாலும் அதிக திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு உள்ளதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து உள்ளதால் இந்த படம் நிச்சயம் சிம்பு மற்றும் கவுதம் மேனனுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகையை அமேசான் நிறுவனம் கொடுத்து ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வழக்கமாக தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இந்த படம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

100 ஆண்டு தமிழ் சினிமாவில் இந்த படம் தான் பெஸ்ட் வசூல்: திருப்பூர் சுப்பிரமணியம்

100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் மிக அதிக வசூல் செய்த படம் இது தான் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார் 

'வாரிசு' படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்த விஜய்யின் நண்பர்: வைரல் புகைப்படம்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும்

'என்னுடைய காதலர் இவர் தான்: ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த 'சர்வைவர்' பிரபலம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் தன்னுடைய காதலர் இவர்தான் என தனது இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ள

இந்த தேதிய டைரில குறிச்சு வச்சுக்கோங்க, உலகத்தில எங்க இருந்தாலும் வந்துருங்க: குஷ்பு

செப்டம்பர் 24ஆம் தேதியை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் திருச்சிக்கு வந்து விடுங்கள் என்றும் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம்

கருப்பு காஸ்ட்யூமில் செம கிளாமர்.. ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஷூட்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்