சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' கிளிம்ப்ஸ் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து சூப்பர் ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த ஸ்டில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை மதியம் 1.26 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ’முத்துவின் பயணத்தை காணலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்பு இந்த படத்தில் ’முத்து’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிய வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வரும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ராஜூ-பிரியங்கா காரசாரமான மோதல்: கைதட்டிய அக்சரா!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்குகளை மிகவும் காரசாரமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடி வருகின்றனர்.

'க்': தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி திரைப்படம்

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் . 

முதல்முறையாக நாயகனை பயமுறுத்தும் டைம்: சாண்டி மாஸ்டரின் '3:33'

பிரபல  நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'.  முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக,

“சதுரங்க வேட்டை 2” ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்: படக்குழுவினர் அறிவிப்பு

அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் உருவான 'சதுரங்க வேட்டை 2' என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படம் ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது

திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா? நட்சத்திரத் திருமணம் குறித்து பரபரப்பு!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது.