லிங்குசாமியின் அடுத்த படத்தில் இணைந்த சிம்பு!

பிரபல இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படமான ‘தி வாரியர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 14 என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

சிம்பு இதற்குமுன் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சிம்பு பாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிம்பு பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்

ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை: அதிரடி நடவடிக்கை!

பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான இந்தி சர்ச்சைக்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தல் பதிவு!

நாடு முழுவதும் ஹிந்தி மொழி குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப்: சென்னை சாதனை 

குஜராத்தில் நடந்த தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகளில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா புலம் மாணவிகள் பாராட்டும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்: பீஸ்ட்' 3வது சிங்கிள் பாடல்!

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டாகியுள்ளது.

கள நிலவரம்: சி.எஸ்.கே. - எஸ்.ஆர்.எச். மோதல் கம் பேக் கொடுக்கத் தயாராகும் ஜடேஜா

இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 17வது போட்டியில் நாளை மும்பையில் உள்ள டாக்டர் டி ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.