நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்: சிம்புவின் இரங்கல் அறிக்கை

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

சிம்பு நடித்த ’மன்மதன்’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் நேற்று இரவு தனது வீட்டில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்., மறைந்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் அவர்களுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சிம்பு இதுகுறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்‌. மன்மதன்‌ படம்‌ என்‌ வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக்‌ கொண்டது.

என்‌ மீது மிகுந்த அன்பு கொண்டவர்‌ திரு. கிருஷ்ணகாந்த்‌ அவர்கள்‌. மன்மதன்‌ படத்தை என்‌ மீது நம்பிக்கை வைத்து இயக்கச்‌ சொன்னவர்‌. நீங்க ஸ்கிரிப்ட்‌ பண்ணுங்க. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்‌ தனிப்பட்ட முறையில்‌ என்‌ மீது மிகுந்த எதிர்பார்ப்பைக்‌ கொண்ட நல்ல மனிதர்‌. அவரது மரணம்‌ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கு
ஆறுதல்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்‌. இவ்வாறு சிம்பு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர், ‘மன்மதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு.கிருஷ்ணகாந்த் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

More News

கொரோனா தடுப்பூசிக்காக 50 ஆயிரம் சுறாக்கள் வேட்டை!!! கதிகலங்க வைக்கும் பின்னணி!!!

தடுப்பூசி என்பது குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

மனுச பயகூட சேர்ந்தாலே இப்படித்தா… பார்வையாளர்களைத் தரக்குறைவாகத் திட்டிய கிளிகள்!!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த கிளிகள் பார்வையாளர்களைத் தரைகுறைவாகப் பேசிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகளின் செல்போனில் ஆபாச படங்களா?

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி

'தாதா 87' இயக்குனருக்கு உதவிய விக்னேஷ் சிவன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த 'தாதா 87' படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினாரா கமல் பட நாயகி? 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை விஜய் டிவி நிர்வாகம் விறுவிறுப்பாக செய்து வருகிறது