close
Choose your channels

ரஜினி-கமல் அரசியல்: சிம்புவின் ஆதரவு யாருக்கு?

Tuesday, April 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தனி அரசியல் கட்சி ஆரம்பித்து களத்தில் குதித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இருவரில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

இந்த நிலையில் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல், ரஜினி ஆகியோர்களின் அரசியல் குறித்து விளக்கியுள்ளார். கமல், ரஜினி இருவருமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளார்கள் என்றும், இருவரிடத்திலும் காவிரி பிரச்சனை குறித்து கருத்து சொல்லுமாறு கேட்பதே தவறு என்றும், அவர்கள் எந்த பதில் கூறினாலும் அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற விமர்சனம் வரும் என்றும் சிம்பு கூறியுள்ளார்.

மேலும் தான் கமல் கட்சியிலோ அல்லது ரஜினி கட்சியிலோ இல்லை என்றும், இருவருமே காவிரி பிரச்சனை குறித்து எந்த கருத்து சொன்னாலும் அதில் அரசியல் சாயம் பூசப்படுவதாகவும் சிம்பு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment