சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்.. விரைவில் டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

முத்ரா பிலிம் பேக்டரி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

’சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமாரசாமி, ’எங்கேயும் எப்போதும்’ சரவணன், மற்றும் ’கட்டப்பாவை காணோம்’ பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய ராகேஷ் N.S இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது.

நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கை கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இப்படத்தில் முதன் முறையாக முழு நீளக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், குடும்பத்துடன் அனைவரும் ரசித்து கொண்டாட, ஒரு கலக்கலான திரைப்படம் இதுவென்பதை உறுதி செய்வதாக உள்ளது. அசத்தலாக அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை முத்ரா பிலிம் பேக்டரி சார்பில் ரேஷ்மி மேனன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

More News

எனது லட்டுகள்.. நடிகை மாதவியின் மகள்கள் என்ன அழகு.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகை மாதவி தனது மூன்று மகள்கள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து 'எனது லட்டுக்கள்' என்று கேப்ஷனாக பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்

4 வருட திருமண வாழ்க்கை.. பரவசத்துடன் பதிவு செய்த சிம்பு, தனுஷ் நடிகை..!

தமிழில் இரண்டே இரண்டு திரைப்படங்கள் நடித்த, அதில் ஒன்று சிம்பு படம் இன்னொன்று தனுஷ் படம் என நடித்த நடிகை தனது நான்காவது திருமண நாள் குறித்து பரவசத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

எதிரியை தோற்கடிக்க உன் அழகு ஒன்றே போதும்: தர்ஷா குப்தாவின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.  

ரஜினி-லோகேஷின் 'தலைவர் 171' படம் குறித்து கமல்ஹாசன்.. 'கமல் 234' அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் '171' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் குறித்த தனது கருத்தை

என்னிக்காவது ஒரு நாள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன்: அட்லி

பொதுவாக என்னுடைய படத்தை நான் முதல் பாகத்திலேயே முடித்துவிடும் வழக்கம் உடையவன் என்றும், ஆனால் இந்த ஒரு படத்தை மட்டும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எனக்கு எண்ணம் ஏற்பட்டுள்ளது