முதல் முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் அஜித்-விஜய் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

கடந்த சில வருடங்களுக்கு முன் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் ராசியான நாயகியாக இருந்தவர் சிம்ரன். 'வாலி', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'அவள் வருவாளா', 'வாரணம் ஆயிரம்' உள்பட பல படங்கள் சிம்ரனின் வெற்றி படங்கள் ஆகும்

இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா கேரக்டரில் நடிக்கவிருந்த சிம்ரன், அதன்பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மேலும் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் பாபிசிம்ஹா மற்றும் சனாத்ரெடி, ரஜினிக்கு மகன்களாக நடிப்பதாகவும்,  சனாத்ரெட்டிக்கு மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணுவிஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது.

கண்டறிந்து காயடிக்க வேண்டும்: 17 மனிதமிருகங்கள் குறித்து இயக்குனர் பார்த்திபன்

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 11 வயது சிறுமியை 22 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்தின் புதிய அறிவிப்பு

சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,.

விஜய்சேதுபதி, ஆர்யாவுடன் இணைந்த த்ரிஷா

கடந்த வாரம் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் சிவாவின் 'Ī

பிரபல சின்னத்திரை நடிகை சென்னையில் தற்கொலை

கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில்...