'காலா'வை நேரடி ஒளிபரப்பு செய்த சிங்கப்பூர் நபர் கைது

  • IndiaGlitz, [Thursday,June 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாள் முதல்காட்சியில் ரசிகர்கள் படத்தை பார்த்து தெறிக்க விட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் ஒருவர் லைவ் செய்து பிடிபட்டுள்ளார்.

'காலா' திரைப்படம் சிங்கப்பூரில் பிரிமியர் காட்சிகள் நேற்றிரவு தொடங்கியது. அப்போது அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது மொபைல்போன் மூலம் ஸ்ட்ரீமிங் செய்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'காலா' படத்தை லைவ் செய்த நபரை பிடிக்க துரிதமாக செயல்பட்ட விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

'காலா' படத்தின் மந்தமான டிக்கெட் விற்பனைக்கு காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்னும் சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் வெளிவரும் முதல் படம் என்பதால்

கமல்ஹாசனுக்கு விவசாயிகள் கொடுத்த சிறப்பு பரிசு

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தளபதி விஜய்க்கு ஸ்டண்ட் சில்வா கூறிய நன்றி

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ஆறுதல் கூறுவதாக சென்ற பலர் அந்த வருகையை தங்களுடைய சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தி கொண்டவர்களின் மத்தியில் எந்தவித ஆரவாரமும்

சூர்யா படத்திற்காக இளமைக்கு மாறிய சூப்பர் ஸ்டார்

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யிடம் ரஜினி பாடம் கற்று கொள்ள வேண்டும்: இயக்குனர் அமீர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்குக் இரங்கலும், காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலும் கூறிவிட்டு சென்னை திரும்பினார்.