கொரோனா தாக்கியதால் சுவை, வாசனை திறனை இழந்த பிரபல பாடகர்: அதிர்ச்சி தகவல் 

உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் பிரபல பாடகர் ஒருவருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அவர் சுவை மற்றும் வாசனைத்திறனை இழந்துவிட்டதாகவும் வெளிவந்துள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அமெரிக்க பாப் பாடகர் ஆரோன் ட்வீட். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது; ஹாய் நண்பர்களே. எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.

அதிர்ஷ்டவசமாக எனக்கு மிகவும் லேசான அறிகுறிகளே தென்பட்டன. காய்ச்சல் இல்லை. ஆனால் சளி இருக்கிறது. ஆனால், பலருக்கு மிகவும் தீவிரமான அறிகுறிகள் ஏற்படுவதாக அறிகிறேன். இது மிகவும் ஆபத்தான வைரஸ். வாசனைத் திறன் மற்றும் சுவையை இழந்துவிட்டதாக உணர்கிறேன். கடந்த திங்கள்கிழமை பரிசோதனை முடிவுகள் வந்தன. இந்த சூழலை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள இருக்கிறேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானால் தாக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு ஆரோன் ட்வீட் கூறியுள்ளார்.

More News

கொரோனா பாதிப்பை மறைத்த தெலுங்கானா டிஎஸ்பி: மகனையும் தாக்கியதால் பரபரப்பு

தெலுங்கானா மாநில காவல்துறை டிஎஸ்பி ஒருவருக்கும் அவருடைய மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு போட்டும் திருந்தாத டெல்லி மக்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.

ராணுவத்தை அழைப்பேன், வெளியே நடமாடினால் கண்டதும் சுட உத்தரவு: முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்

நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து இந்திய மக்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்: கமல்ஹாசன்

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே தற்போது பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பது எப்படி என்று புரியாமல் தவித்து வருகிறது

சென்னையைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது