close
Choose your channels

பாடகி அனுராதா ஸ்ரீராம் கணவரா இவர்? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவருமான அனுராதா ஸ்ரீராமின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் அனுராதா ஸ்ரீராம் என்பது தெரிந்ததே. அரவிந்த்சாமி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பம்பாய்’ என்ற திரைப்படத்தில் ’மலரோடு மலர்ந்து’ என்ற பாடலின் மூலம்தான் திரை உலகில் அனுராதா ஸ்ரீ ராம் அறிமுகமானார். அதன் பின்னர் பாரதிராஜாவின் ’பசும்பொன்’ சுகாசினியின் ’இந்திரா’ சத்யராஜின் ’வில்லாதி வில்லன்’ அஜித்தின் ’ஆசை’ உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடினார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் சிங்கள மொழியிலும் என மொத்தம் சுமார் 4000 பாடல்கள் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் ரகுமான், இளையராஜா, வித்யாசாகர், தேவா, எஸ்ஏ ராஜ்குமார், டி ராஜேந்தர் உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு ஜெயந்த் மற்றும் லோகேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுராதாவின் சகோதரர் முருகன் என்பவரும் ஒரு பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கணவருடன் அனுராதா ஸ்ரீராம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.