பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலையில் முன்னேற்றமா? டுவிட்டரில் அப்டேட் தந்த குடும்பத்தினர்..!

  • IndiaGlitz, [Monday,March 27 2023]

பிரபல கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ லண்டன் சென்று இருந்த போது அங்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து அப்டேட்டை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் உள்பட ஏராளமான மொழிகளில் பல திரைப்பட பாடல்களை பாடிய பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் சென்றார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சுயநினைவு இழந்ததாகவும், லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளனர். அதில் மருத்துவர்கள் அளித்த மருத்துவ சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளது. அவரது உடல் நலம் தற்போது நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. இந்திய அரசு பாம்பே ஜெயஸ்ரீ சிகிச்சைக்கு பக்கபலமாக இருந்து உதவி வருகிறது. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி’ என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

More News

'ரோஜா' நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படங்கள்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தில் நாயகியாக நடித்த மதுபாலாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

அஜித்தின் 'உல்லாசம்' நாயகி மகேஸ்வரியா இவர்? செம ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!

அஜித், விக்ரம் இணைந்து நடித்த 'உல்லாசம்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த மகேஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'லியோ' படத்தில் இணைந்தாரா 'விக்ரம்' நடிகர்?  உறுதியாகிறதா LCU?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் காஷ்மீர் படபிடிப்பு முடிவடைந்தது

விஜய்யை அடுத்து அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா-கார்த்தி: தந்தை மறைவுக்கு இரங்கல்..!

நடிகர் அஜித்தின் தந்தை பிஎஸ் மணி சமீபத்தில் காலமான நிலையில் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற விஜய், அஜித் தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

700 படங்களுக்கும் மேல் நடித்த நகைச்சுவை நடிகர் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

 தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்பட 700 படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.