இந்த ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருக்கலாமே! பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு சின்மயி கேள்வி

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பங்கேற்பாளர்கள் தவறு செய்தால் டுவிட்டரிலும், நேரிலும் கேள்வி கேட்கும் பொதுமக்கள், இதே ஆர்வத்தோடு, தவறு செய்யும் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்டிருந்தால் இந்நேரம் நாடு முன்னேறியிருக்கும் என்று பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறு செய்த காயத்ரியை நேற்று கமல்ஹாசன் முன் பார்வையாளர்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். இதுகுறித்து சின்மயி கூறியபோது, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்க்ளை அவமானப்படுத்த நினைக்கும் நம்ம மக்கள், அதே ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருக்க வேண்டும் என்றும், நாட்டை அழிப்பவர்களை எல்லாம் கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளர்களை துரத்தி துரத்தி அவமான படுத்துவதில் என்ன லாபம்? என்று கேள்வி கூறியுள்ளார்.
சின்மயி பதிவு செய்த இந்த கருத்துக்கு பொதுமக்களிடம் இருந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

More News

சசிகலா நீக்கம், ஓபிஎஸ் துணை முதல்வர்: அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

அதிமுகவின் இரு அணீகள் இணைந்ததை அடுத்து அடுத்தடுத்து அதிரடி செய்திகள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் அவர்களுக்கு புதிய பதவி: ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு சற்றுமுன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? பிரபல நடிகை கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது.

இன்று 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அதிமுகவின் இரு அணிகள் தற்போது இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இந்நாள் முதல்வர் ஈபிஎஸ் அவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் ஆளுனர

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா! கமல்ஹாசனின் டுவீட் எதை குறிக்கின்றது

அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருந்த ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இன்று அதிகாரபூர்வமாக இணையவுள்ளன.