close
Choose your channels

'ரஞ்சிதமே' பாடல் மட்டுமல்ல.. 'வாரிசு' படத்தில் இதையும் செய்துள்ளார் மானஸி!

Friday, January 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் நேற்று முன்தினம் பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. அது மட்டும் இன்றி குடும்பங்கள் கொண்டாடும் படம் என்ற வகையில் தாய்மார்களை இந்த படம் வெகுவாக கவர்ந்து உள்ளது என்பது இந்த படத்தின் விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஹைலைட்டான ரஞ்சிதமே என்ற பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் படத்தில் இந்த பாடல் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் செம டான்ஸ் காரணமாக ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

இந்த பாடலை விஜய் மற்றும் மானஸி பாடியிருந்த நிலையில் பாடகி மானஸி தனது சமூக வலைதளத்தில் ரஞ்சிதமே பாடலை மட்டும் தான் பாடவில்லை என்றும் ‘வாரிசு’ தெலுங்கு பதிப்பிற்கு ராஷ்மிகா மந்தனாவுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல திரைப்படங்களுக்கு மானஸி பின்னனி குரல் கொடுத்துள்ளார் என்பதும், குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான தனுஷின் ‘மாறன்’ திரைப்படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு பின்னணி குரல் கொடுத்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos