close
Choose your channels

மாயா குடும்பத்தினர் கேஸ் போட போறாங்க.. பிரபல பாடகி கூறிய பரபரப்பு தகவல்..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாயா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் பாடகியமான சுசித்ரா மீது மாயா குடும்பத்தினர் வழக்கு தொடர உள்ளதாக பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர் மாயாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது

மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் Lgbtq+ வாழ்க்கை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர். பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது.

தனக்கு வெளியுலகில் நிகழும் அவமானங்களையும் அநீதிகளையும் பற்றிய எந்த அறிதலும் இல்லாத சூழலிலும் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி என்று ஸ்வாகதா கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

மாயா மீது பாடகி சுசித்ரா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’ஆடை’ பட நடிகை அனன்யாவும் ஒரு அதிர்ச்சி குற்றச்சாட்டை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment