close
Choose your channels

அதர்வா பட விழாவில் ரம்யாகிருஷ்ணனின் பாகுபலி கட்டளை

Wednesday, June 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான வெற்றிப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம் போல் அமைந்தது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக, 'இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்' என்று அவர் பேசிய வசனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஞாபகம் இருக்கும்.

இந்த நிலையில் அதர்வா நடித்த 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' பட விழாவில் கலந்து கொண்ட ரம்யாகிருஷ்ணன், "இந்த படம் பெரிய ஹிட்டாக எனது வாழ்த்துக்கள். பாடல்கள் மற்றும் படம் சிறப்பாக அமைந்துள்ளது. எனவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். இதுவே எனது கட்டளை, என் கட்டளையே சாசனம்" என்று தனது பாணியில் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அதர்வா, ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இளவரசு ஓடம் இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்கள் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment