சிவாஜி கணேசன் பிறந்த நாளில் அஜீத் படம்?

  • IndiaGlitz, [Wednesday,July 08 2015]

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் லட்சுமி மேனனுடன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகளும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கபீர்சிங் உடன் ஆக்சன் காட்சிகளிலும் நடித்த அஜீத், தற்போதைய மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் ஐரோப்பிய மற்றும் அரபுநாடுகளிலும், பின்னர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் திரையிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியிடும் நாள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

'தல 56' படத்தின் டீஸர் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியும், பாடல் வெளியீடு அக்டோபர் இறுதியிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் டீஸர் வெளியாகும் அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெகுவிரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படம் அஜீத்தின் மற்றொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தூங்காவனத்தில் கமலுக்கு வில்லனான பிரபல ஹீரோ

கமலின் த்ரில்லர் படமான தூங்காவனத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் ரோட்டில் இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது...

'எந்திரன்' சாதனையை முறியடிக்குமா 'பாகுபலி'

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது மிக வேகமாக புக் ஆகி வரும் ரிசர்வேஷனில் இருந்தே தெரிகிறது...

விஜய் 59 (விஜய் அட்லி) பட ரிலிஸ் தேதி

இளையதளபதி விஜய் புலி படத்தை தொடர்ந்து , ராஜா ராணி டைரக்டர் அட்லி இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார்...

தனுஷின் 'மாரி' சென்சார் விபரங்கள்

வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய இரண்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படம் வரும் 17ஆம்...

நயன்தாராவின் 'மாயா' ரிலீஸ் தேதி?

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பிற்கு உரிய திரைப்படமான 'மாயா' வரும் 24ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது...