close
Choose your channels

சிவாஜி கணேசன் பிறந்த நாளில் அஜீத் படம்?

Wednesday, July 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் லட்சுமி மேனனுடன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகளும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கபீர்சிங் உடன் ஆக்சன் காட்சிகளிலும் நடித்த அஜீத், தற்போதைய மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் ஐரோப்பிய மற்றும் அரபுநாடுகளிலும், பின்னர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் திரையிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியிடும் நாள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

'தல 56' படத்தின் டீஸர் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியும், பாடல் வெளியீடு அக்டோபர் இறுதியிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் டீஸர் வெளியாகும் அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெகுவிரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த திரைப்படம் அஜீத்தின் மற்றொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.