close
Choose your channels

யாரும் யோசிக்காத வேற லெவல் டைட்டில்.. சிவகார்த்திகேயன் 21வது படத்தின் சூப்பர் டீசர்..!

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது டைட்டில் இடம் கூடிய அட்டகாசமான அதிரடி ஆக்சன் டீசர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு ’சோல்ஜர்’ ’காஷ்மீர்’ உள்ளிட்ட பல டைட்டில்கள் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் யாரும் யோசிக்காத ’அமரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு கார்த்திக் நடித்த திரைப்படம் ஒன்று இதே பெயரில் வெளியான நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கும் அதே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் டீசரில் காஷ்மீர் தீவிரவாதிகள், அவர்களால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், காஷ்மீர் மக்களை காப்பாற்ற உயிரை தியாகம் இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல காட்சிகள் இருப்பதை எடுத்து இந்த படம் முழுக்க முழுக்க ஒரு சீரியஸான படம் என்பது தெரியவந்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment