கமல்ஹாசனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

கமல்ஹாசனுடன் முதல்முறையாக சிவகார்த்திகேயன் இணைய உள்ளார் என்ற செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமலஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஒரு சில படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனர்களில் ஒருவரின் பரிந்துரையின் பேரில்தான் சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் இணைந்த சத்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது இந்த பிரபல நடிகரா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தெலுங்கு நடிகரின் நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களை கதறி அழவைத்த அமீர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவில் அக்சரா மற்றும் சிபி ஆகியோரின் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதால் இதனை அடுத்து பிக்பாஸ் வீடு சென்டிமென்ட் மற்றும்

பிரபல நடிகை சுட்டுக்கொலை… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சம்பவம்!

மெக்சிகோ நாட்டில் பிரபல நடிகையாக வலம்வந்த டானியா மெண்டோசா என்பவர்