close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

Tuesday, December 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்பட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் மும்பையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென சிம்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளிப் போன நிலையில் தற்போது மீண்டும் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜனவரி இரண்டாம் வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் ஒரு சில மாதங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடித்து வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.