சிவகார்த்திகேயன் வீட்டில் என்ன விசேஷம்? மனைவியுடன் இருக்கும் புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Sunday,August 28 2022]

சிவகார்த்திகேயன் வீட்டில் என்ன விசேஷம்? மனைவியுடன் இருக்கும் புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பதும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ மற்றும் ‘பிரின்ஸ்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் அவையும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை லைக்ஸ் செய்த ஏராளமான ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி ஆர்த்தியை திருமணம் செய்த நிலையில் தற்போது 12-வது திருமண நாளை அவர் கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஆராதனா என்ற மகளும் 2021ஆம் ஆண்டு குகன் தாஸ் என்ற மகனும் பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே அபார்ட்மெண்டில் சொகுசு வீடு வாங்கிய விஜய்-ஆர்யா? எத்தனை கோடி தெரியுமா?

சென்னையில் கட்டப்பட்டிருக்கும் அபார்ட்மென்ட் ஒன்றில் சொகுசு வீடுகளை விஜய் மற்றும் ஆர்யா வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிரபல இயக்குனரின் அடுத்த படம் ஓடிடி ரிலீஸா? ரசிகர்கள் அதிருப்தி

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு அனைத்து படங்களும் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் ஒருசில படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஆர்யாவின் 'கேப்டன்' சென்சார் தகவல்: ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'கேப்டன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

'பிசாசு 2' ஆண்ட்ரியா நிர்வாண காட்சியை படம்பிடித்தவர் யார்? மிஷ்கின் விளக்கம்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளன. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது

அயிரை மீனை பாலில் கழுவும் விஜய்சேதுபதி: 'மாமனிதன்' படத்திற்கு திமுக பெண் எம்பி பாராட்டு

விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' திரைப்படத்தை திமுக பெண் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பார்த்து இயக்குனருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: