close
Choose your channels

ஒரே அபார்ட்மெண்டில் சொகுசு வீடு வாங்கிய விஜய்-ஆர்யா? எத்தனை கோடி தெரியுமா?

Sunday, August 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் கட்டப்பட்டிருக்கும் அபார்ட்மென்ட் ஒன்றில் சொகுசு வீடுகளை விஜய் மற்றும் ஆர்யா வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நீலாங்கரையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதே நேரத்தில் அவருடைய அலுவகம் அடையாறில் உள்ள வீட்டில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அப்பார்ட்மென்டில் சொகுசு வீடு ஒன்றை விஜய் வாங்கி இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூபாய் 35 கோடி என்றும் கூறப்படுகிறது. தற்போது அடையாரில் இயங்கி வரும் விஜய்யின் அலுவலகம் புதிதாக வாங்கியிருக்கும் இந்த சொகுசு வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அபார்ட்மெண்டில் ஏற்கனவே நடிகர் ஆர்யா ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே அப்பார்ட்மெண்டில் விஜய் மற்றும் ஆர்யா ஆகிய இருவருமே சொகுசு வீடுகளை வாங்கி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்திற்கு அவருடைய சம்பளம் ரூ.110 கோடி என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.