close
Choose your channels

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தின் நாயகி இந்த பிரபலமா?சூப்பர் அப்டேட்..!

Saturday, August 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்கே 21’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

இந்த படத்தில் நாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ’சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் மிருணாள் தாக்கூர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும், அவருக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இணைந்து உள்ளதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சில பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் அது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்போது வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment