close
Choose your channels

மீண்டும் இணையும் ரூ.100 கோடி வசூல் பட கூட்டணி.. சிவகார்த்திகேயன் அடுத்த பட அப்டேட்..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் சமீப காலமாக நல்ல வசூலை செய்து வருகிறது என்பதும் அவர் நடித்த ’டாக்டர்’ ’டான்’ உள்பட ஒரு சில படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ’டான்’ திரைப்பட குழு தான் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ’டான்’ திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’அமரன்’ என்ற படத்திலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு அவர் சிபி சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment