ஒரே டைட்டிலில் விஜய்-சிவகார்த்திகேயன் படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

பிரபல நடிகர்கள் நடித்த பழைய படங்களின் டைட்டிலை புதிய படங்களுக்கு வைப்பது கோலிவுட்டில் ஒரு டிரெண்டாக இருப்பது தெரிந்ததே. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்கள் ஒரே டைட்டில் கொண்ட படத்தில் நடித்து வரும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கு 'ஹீரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள படத்திற்கும் 'ஹீரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு 'ஹீரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் ஏதாவது ஒரு படத்திற்கு டைட்டில் மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் 'ஹீரோ' படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும், யுவன்ஷங்கர் ராஜா இசையும் அமைக்கவுள்ளனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

More News

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் தமிழ் எழுத்தாளர்

கல்கி, பாலகுமாரன், சுஜாதா முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை பல தமிழ் எழுத்தாளர்கள் திரையுலகிலும் ஜொலித்து வந்த நிலையில் அந்த வரிசையில்

பாய்பிரண்டுகளுடன் போலீஸை தாக்கிய பிக்பாஸ் ஜூலி! சென்னையில் பரபரப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பொதுமக்களின் கவனத்தை கவர்ந்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த நரித்தனத்தால் அனைவராலும் வில்லியாக பார்க்கப்பட்டார்

ரசிகர்களுக்கு ஆபத்து என்றவுடன் பதறிய தளபதி விஜய்: வைரலாகும் வீடியோ

ஒரு நடிகர் கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலே தனது ரசிகர்களை அரசியல் உள்பட சுயநலத்திற்கு பயன்படுத்தி வரும் நடிகர்கள் மத்தியில் ரசிகர்களிடம் உண்மையான பாசம் வைத்துள்ள

பூஜையுடன் தொடங்கிய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம்!

கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் ஐந்து முக்கிய நடிகர்களின் படங்களுடன் ரிலீஸ் ஆன கன்னட டப்பிங் படம் 'கேஜிஎப். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குங்கள்: தமிழ் நடிகை ஆவேச கருத்து

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்கு சாதகமாக அரசியலாக்கி வரும் நிலையில் உண்மையான கொதிப்புடன் கருத்து கூறி வருபவர்களில் திரையுலகினர்களும் சிலர் என்பது தான் உண்மை