close
Choose your channels

'அயலான்' டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு..!

Monday, October 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’லால் சலாம்’ படமும் பொங்கல் தினத்தில் வெளியானாலும் ’அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில் சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் டீசர் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

’அயலான்’ படத்தின் டீசர் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசரை தயார் செய்யும் ஏஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் ரவிக்குமாரின் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment