'டான்' ரிலீஸ் தேதி இதுதான்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதே தேதியில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ’டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

’டான்’ திரைப்படம் மே 13ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் இந்த படத்தை காண அனைவரும் தயாராக இருங்கள் என்றும் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.

More News

சிவராத்திரி தினத்தில் 'பீஸ்ட்' நாயகி என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 18 மில்லியன் ஃபாலோயர்களை

அஜித்தின் அரசியல் வருகை குறித்து டுவிட்டரில் மேனேஜர் விளக்கம்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடியும் ஐந்து நாட்களில் ரூபாய் 150 கோடியும்

'விக்ரம்' படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்: இணையத்தில் வைரல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வலிமை' விமர்சனம்: புளூசட்டை மாறனுக்கு 'சார்பாட்டா பரம்பரை' நடிகரின் வேண்டுகோள்!

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படத்திற்கு ஏராளமான நெகடிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் அவற்றில் ஒன்று புளூசட்டை மாறனின் விமர்சனம் என்பது தெரிந்ததே.

உக்ரைன் குழந்தைகளை மீட்க நிதி திரட்டும் தமிழ் திரைப்பட நடிகை: குவியும் பாராட்டுக்கள்

கடந்த 6 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் நாட்டில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர்