close
Choose your channels

'டான்' ரிலீஸ் தேதி இதுதான்: சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதே தேதியில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ’டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

’டான்’ திரைப்படம் மே 13ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் இந்த படத்தை காண அனைவரும் தயாராக இருங்கள் என்றும் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.